கள்ளநோட்டுக்களை வீட்டிலேயே அச்சடித்த நபர் கைது

fake-currency
கள்ளநோட்டுக்களை வீட்டிலேயே அச்சடித்த நபர் கைது

Fake currency: மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தில் 59 வயது நபர் ஒருவர் கள்ளநோட்டுக்களை வீட்டில் இருந்துகொண்டே அச்சடித்ததாக கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட குருபாதா ஆச்சார்ஜி, நேற்று முன் தினம் பிஷ்ணுபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஷியாம்நகரில் உள்ள ஒரு கடைக்கு பொம்மைகள் வாங்கச் சென்றார். பின்னர் அவர், தான் அச்சடித்த போலி நோட்டினை கடைக்காரரிடம் கொடுத்தார்.

ஆனால், அது போலியானது என கடைக்காரர் கண்டுபிடித்தார். உடனே, அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவரை சரமாரியாக தாக்கினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ஆச்சார்ஜியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், 1,65,560 ரூபாய் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள், பிரிண்டர் மற்றும் இதர பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Vikram Movie: சர்வதேச தரத்தில் மிரட்டும் விக்ரம்