Vikram Movie: சர்வதேச தரத்தில் மிரட்டும் விக்ரம்

vikram-movie
சர்வதேச தரத்தில் மிரட்டும் விக்ரம்

Vikram Movie: விக்ரம் படத்தின் விமர்சனங்களை ட்விட்டர்வாசிகள் பதிவிட்டு வருகின்றன

கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் என மூவரும் முதல் பாதியில் மிரட்டி உள்ளனர் என்றும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மேஜிக் படம் முழுக்க நிறைந்து காணப்படுகிறது என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அனிருத் தான் ஹீரோவே என்றும் பிஜிஎம் ஒவ்வொரு இடத்திலும் மண்டைக்குள் புகுந்து விளையாடுகிறது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் விமர்சனங்களை இங்கே காண்போம்..

ரமேஷ் பாலா விமர்சனம் சினிமா டிராக்கரான ரமேஷ் பாலா விக்ரம் படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டு வெறித்தனம் என பதிவிட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மேஜிக், கமல்ஹாசன் ஆன் ஃபயர், பகத் ஃபாசில் ஷோ ஆல் தி வே, விஜய்சேதுபதி பெருசா மிரட்டி உள்ளார் என்றும் சிறந்த இன்டர்வெல் விக்ரம் படத்தில் இருக்கு என்றும் போட்டு கமல் ரசிகர்களை தியேட்டருக்கு கிளம்பி வாங்க என அலாரம் அடித்துள்ளார்.

பிரசாந்த் ரங்கசாமி விமர்சனம் தமிழ் சினிமாவை சர்வதேச சினிமாவாக விக்ரம் படத்தின் இன்டர்வெல் காட்சி மாற்றி உள்ளது. நடிகர் கமலுக்கான உண்மையான ட்ரிப்யூட் படமாக விக்ரம் அமைந்துள்ளது என பிரபல விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

100 சதவீதம் லோகேஷ் படம் மாஸ்டர் திரைப்படம் 50 சதவீதம் லோகேஷ் படம் 50 சதவீதம் விஜய் படமாக இருந்த நிலையில், விக்ரம் படம் முழுக்க முழுக்க 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படம் தான் என படம் பார்த்த நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். கன்ஃபார்ம் பிளாக்பஸ்டர் படமாக விக்ரம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ம் தேதி வெளியிடுவோம் – அண்ணாமலை