இளையராஜா விவகாரம் – கி. வீரமணி, ஈவிகேஎஸ் மீது வழக்கு பதிய உத்தரவு

இளையராஜா விவகாரம்
இளையராஜா விவகாரம்

Ilayaraja issue: இசையமைப்பாளர் இளையராஜா மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதினார். இந்த விவகாரம் கடந்த மாதம் ஹாட் டாபிக்காக இருந்தது. இளையராஜா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என பலர் வலியுறுத்தினர். ஆனால், தன்னுடைய கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என இளையராஜா கூறிவிட்டார்.

இந்தச் சூழலில் அம்பேத்கரோடு மோடியை ஒப்பிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் இளையராஜாவை சாதிய ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்தார். பெரியாரின் பேரனாக இருந்துகொண்டு சாதிய ரீதியாக இளங்கோவன் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதுமட்டுமின்றி பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்துக்கு தற்போது தலைவராக இருக்கும் கி. வீரமணி; இளங்கோவனின் பேச்சை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்ததையும் ஏற்றுக்கொள்ள முடியாது என பலர் கூறினர்.

இந்நிலையில், பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் மேடையில் அமர்ந்திருந்த கி. வீரமணி உள்ளிட்டோர்மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், உத்தரவு கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரும் அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கணவன் வீட்டில் கழிப்பறையில்லாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை