Driver kills Chennai couple: மயிலாப்பூர் ஐடி கம்பெனி அதிபரை கொலை செய்தது எப்படி?

மயிலாப்பூர் ஐடி கம்பெனி அதிபரை கொலை செய்தது எப்படி
மயிலாப்பூர் ஐடி கம்பெனி அதிபரை கொலை செய்தது எப்படி

Driver kills Chennai couple: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(65) மற்றும் அவரது மனைவி அனுராதா(60). அங்கிருக்கும் துவாரகா குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த தம்பதியின் மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் மருத்துவர்களாக இருக்கின்றனர். ஸ்ரீகாந்த் குஜராத் மாநிலத்தில் தனியார் ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். மகள் நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததால் கடந்த ஆறு மாத காலமாக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில், ஸ்ரீகாந்தும், அனுராதாவும் தங்கியிருந்துள்ளனர். அங்கிருந்து சென்னை திரும்பிய அவர்களை, அவர்களது வீட்டில் நீண்ட காலமாக ஓட்டுநராக பணியாற்றும் லால் கிருஷ்ணா விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டில் 40 கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் இருப்பதை ஸ்ரீகாந்த் தம்பதி பேசியதாக கூறப்படுகிறது. இதன்மீது ஆசைப்பட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா, சென்னை திரும்பிய அந்த தம்பதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரின் நண்பர் ரவியையும் அழைத்துள்ளார். அவர்களின் திட்டப்படி, வீட்டிற்கு அழைத்து வந்த ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர், சடலத்தை துணியால் சுற்றி நெமிலிச் சேரியில் இருக்கும் பண்ணையில் குழி தோண்டி புதைத்து விட்டு, வீட்டில் இருந்த பணத்தை எடுக்க முற்பட்டுள்ளனர். ஆனால், லாக்கரில் எதிர்பார்த்த பணம் இல்லாததால் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

இதையும் படிங்க: Weather Report: இன்று கனமழைக்கு வாய்ப்பு

இதற்கிடையே, அமெரிக்காவில் இருக்கும் ஸ்ரீகாந்தின் மகன், தனது தந்தைக்கு தொடர்ந்து போன் செய்துள்ளார். மொபைல் ஸ்விட்ஸ் ஆஃப் ஆனதால், ஓட்டுநர் லால் கிருஷ்ணாவுக்கு போன் செய்துள்ளார். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த மகன் அங்கிருந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். வீட்டிற்கு உடனடியாக சென்று பார்க்குமாறும் கூறியுள்ளார். இதனிடிப்படையில் அங்கு வந்த உறவினர்கள் வீட்டில் ரத்தக்கறை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த காவல்துறையினர், கொலை நடைபெற்றதைக் கண்டுபிடித்து உடனடியாக லால் கிருஷ்ணாவை பிடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அவர் ஆந்திரா செல்வதை கண்டுபிடித்த காவல்துறை, உடனடியாக அம்மாநில காவல்துறையை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளனர். அவர்களின் உதவியுடன் லால் கிருஷ்ணாவை தமிழக காவல்துறை கைது செய்தது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், “இரட்டை கொலை குறித்து விளக்கினார். 40 கோடி ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு நண்பர் ரவியுடன் சேர்ந்து ஓட்டுநர் லால் கிருஷ்ணா ஸ்ரீகாந்த் தம்பதியை கொலை செய்துள்ளனர்.

அவர்கள் எதிர்பார்த்த பணம் லாக்கரில் இல்லாத நிலையில் வீட்டில் இருந்த 70 கிலோ வெள்ளி 9 கிலோ தங்கம், வைரம் பிளாட்டினம் என கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி உள்ளனர். கொலைக்குப் பிறகு ஸ்ரீகாந்தின் செல்போன் மற்றும் சில தடயங்களையும் அழித்த அவர்கள், கார் மூலமாக திருவான்மியூர், அடையாறு – கோயம்பேடு மற்றும் கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவுக்கு லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராம் இருவரும் வேகமாக சென்றனர்.

ஆந்திரா செல்லக்கூடிய வழியில் உள்ள சுங்க சாவடிகள் மற்றும் அவர்களுடைய செல்போன் சிக்னல் ஆகியவற்றை கண்காணித்து அதன் மூலமாக அவர்கள் செல்லக்கூடிய வழியை கண்டுபிடித்தோம். இது குறித்து ஆந்திர போலீசாருக்கு தகவல் கொடுத்து, அதனடிப்படையில் ஆந்திரா போலீசார் லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராயை கைது செய்தனர். இதன் பின்பு சென்னையிலிருந்து சென்ற தனிப்படை போலீசார் லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராயை கைது செய்து அவர்களிடமிருந்து பல கோடி மதிப்பிலான தங்க வைர வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் இருவரும் முன்னிலையில் நெமிலிச்சேரியில் புதைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகிய இருவரின் உடல்களையும் எடுக்க உள்ளனர். இதுகுறித்து அடுத்தாக பலகட்ட விசாரணை நடைபெற உள்ளது” எனத் தெரிவித்தார்.

Driver kills, buries elderly couple in their farmhouse

இதையும் படிங்க: Tomato Flu: தமிழகத்தில் தக்காளி வைரஸ் காய்ச்சலா?