Chikmagaluru: பெங்களூர் எம்என்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 40 பேர் ஒரு மினி பஸ்சில் கலசா தாலுகா குதிரேமுகா அருகே உள்ள நேத்ராவதி மலைக்கு டரக்கிங் செல்வதற்காக பெங்களூரிலிருந்து கிளம்பி வந்திருந்தனர் அப்பொழுது இன்று அதிகாலை 4 மணி அளவில் சிக்கமகளுர் மாவட்டம் மூடிகெரெ தாலுகா தேவனக்கூள் என்னும் கிராமம் அருகே டிரைவரின் நிலை தடுமாறி மினி பஸ் பல்ட்டியானது

25 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அனைவரும் மூடிகெரே மற்றும் சிக்கமகளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த வாகனத்தை அப்புறப்படுத்தினர்

மற்றும் அதிகப்படியாக நிரந்தரமாக மழை பெய்து வருவதால் வாகனம் கட்டுக்குள் அடங்காமல் விழுந்ததாக தெரிவித்தனர் நேத்ராவதிக்கு மலைக்கு ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் டிரக்கிங் செல்வதற்காக சென்றவர்களுக்கு விபத்து ஆனதால் உடன் வந்தவர்கள் மிகவும் வருத்தத்தை தெரிவித்தனர்



