House Demolished : சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பள்ளி பேருந்து ஓட்டுநரின் வீடு இடித்து தரைமட்டம்

போபால்: House Demolished : மூன்றரை வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி பேருந்து ஓட்டுநரின் வீடு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்துள்ளது. உள்ளாட்சி அதிகாரிகள், போலீசாரின் முன்னிலையில் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.

நடந்தது என்ன: போபாலில் உள்ள தனியார் பள்ளியில் (Private School in Bhopal) உள்ள நர்சரியில் மூன்றரை வயது குழந்தை சேர்க்கப்பட்டது. தினமும் பேருந்தில் வீட்டிற்கு செல்லும் சிறுமியை பள்ளி பேருந்து ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. குழந்தை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. குழந்தை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும், குழந்தையின் உடையை மாற்றும் போது தான் அணிவித்த உடையே யாரோ மாற்றியிருப்பதை அவர் கவனித்துள்ளார். குழந்தை நர்சரியில் படிப்பதால், எப்போதும் கூடுதலாக ஒரு உடையை பையில் வைத்து அனுப்புவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். வேறு உடை மாறியிருப்பதைக் கவனித்த தாய், பள்ளி ஆசிரியையிடம் விசாரித்தார். ஆனால் நாங்கள் உடை மாற்றவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர், உடை மாற்றியது (Dress changed) குறித்து குழந்தையிடம் தாய் கேட்டுள்ளார். அப்போது குழந்தை ‘பஸ் அங்கிள்’ என்று கூறியுள்ளது. குழந்தையிடம் மேலும் விசாரித்தபோது, ​​பள்ளி பேருந்து ஓட்டுநர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும், தனது முகம், உதடு மற்றும் அந்தரங்க உறுப்புகளை தொட்டதாகவும் குழந்தை தாயிடம் கூறியுள்ளது. இதனையடுத்து குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதுகு றித்து குழந்தையின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார் (complained to the school administration). ஆனால், இந்த வழக்கை மூடி மறைக்க பள்ளி நிர்வாகம் முயற்சித்ததாக‌ கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தையின் தாய் போலீசில் புகார் அளித்தார். குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போது பேருந்தில் பெண் உதவியாளர் இருந்தததால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுந‌ர் மற்றும் பஸ் உதவியாளர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மறுபுறம் பள்ளி பேருந்து ஓட்டுநரின் வீடு இடிக்கப்பட்டது. அவர் தனது வீட்டை சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக காரணம் கூறப்படுகிறது. இதன் காரணமாக உள்ளாட்சி அதிகாரிகள், போலீசாரின் முன்னிலையில் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.