India biggest car thief arrested : இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடன் கைது: 5 ஆயிரம் கார்களை திருடியவருக்கு 3 மனைவிகள்!

இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடனை தில்லி போலீசார் கைது செய்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை திருடிச் சென்றுள்ளார். இவரும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

புதுதில்லி: (India biggest car thief arrested) அவர் சாதாரண ஆசாமி இல்லை. அவர்தான் நாட்டின் மிகப்பெரிய கார் திருடன். இவர் திருடிய கார்களின் எண்ணிக்கையை கேட்டால் அதிர்ந்து போவது உறுதி. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் 5 ஆயிரம் கார்களைத் திருடினார். இந்த வேலைக்கு அவருடைய மூன்று மனைவிகளும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை திருடியதாக (Steal more than 5 thousand cars) அனில் சவுகான் தில்லி போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். மத்திய தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் தேஷ் பந்து குப்தா சாலைப் பகுதியில் இருந்து குற்றவாளியைக் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த 27 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை திருடியுள்ளார். மேலும், தில்லி, மும்பை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான சொத்துக்களை அனில் சவுகான் வாங்கி வைத்துள்ளார்.

அவர் கார் திருட்டு குற்றச்சாட்டிற்கு உட்பட்டது மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆயுதக் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார் (He is also involved in arms smuggling). மேலும் பல தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளியிடமிருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாக்களை போலிசார் மீட்டுள்ளனர். அனில் சவுகான் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. 2015 இல், ஒருமுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுடன், ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், 2020 இல் விடுவிக்கப்பட்டார்.

அனில் சுவுகான் தில்லியின் கான்பூர் பகுதியில் தங்கி ரிக்ஷா இழுக்கும் தொழிலாளியாக (As a rickshaw puller) பணியாற்றி வந்தார். 1995 ஆம் ஆண்டு கார்களைத் திருடத் தொடங்கிய அனில் சவுகான், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்களைத் திருடினார். நேபாளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு திருடிய கார்களை விற்பனை செய்து வந்தாராம்.

கொள்ளையின் போது சில டாக்சி டிரைவர்களையும் அனில் கொன்றுள்ளார். அவர் தில்லி, மும்பை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் (Delhi, Mumbai and North Eastern states) தனது முறைகேடான ஆதாயங்களிலிருந்து சொத்துக்களை வாங்கி உள்ளார். அமலாக்க இயக்குனரகமும் (ED) அவர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்தது. அவர் மீது இதுவரை 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார் திருடி சம்பாதித்த பணத்தில் அனில் சவுகான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மற்றும் ஏழு குழந்தைகள் (Three wives and seven children)உள்ளனர். அசாமில், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் தொடர்பு வைத்துள்ளாராம்.