Director K.Balachandar : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் பிறந்த நாள்

1987-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ, 2010-ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே ஆகிய விருதுகள் இயக்குநர் சிகரம் பாலசந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Image Credit : Twitter.

சென்னை: K.Balasandar introduced Actor Rajinikanth to the Tamil film industry : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய கே. பாலசந்தரின் பிறந்த நாள் விழா சனிக்கிழமை (ஜூலை 9) கொண்டாடப்படுகிறது. தமிழகம் நன்னிலத்தைச் சேர்ந்த கே. பாலச்சந்தர் என்று அழைக்கப்படும் கைலாசம் பாலச்சந்தர் 1930-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி பிறந்தவர். இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர்.

திரைத்துறையில் 1965-ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவர் இயக்கிய முதல் தமிழ்த் திரைப்படமாகும். இதில் நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின.

இவரது இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட‌ சிறந்த படங்களில் சிலவாகும். பிரபல‌ நடிகர்களான கமல்ஹாசன், ரஜினி காந்தை தமிழ்த்திரை உலகிற்கு இவர் அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கி உள்ளார்.

கவிதாலயா என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவி, மற்ற‌ இயக்குந‌ர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை தயாரிளித்துள்ளார். அவற்றில் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவை அதில் அடங்கும்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்களை இயக்கி உள்ள பாலசந்தர் தனது திரைப்படங்களில் அதிக அளவில் புதுமுகங்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர்களில் உச்சத்தை அடைந்தவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரை குறிப்பிட்டு சொல்ல முடியும்.

பிற மொழிகளில் நடித்திருந்த சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோரை தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் பாலசந்தருக்கு உண்டு. 1987-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ, 2010-ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே ஆகிய விருதுகள் இயக்குநர் சிகரம் பாலசந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது.