Thunivu Malaysia Promotions: துணிவு படத்திற்கு மலேசியாவில் 360 டிகிரியில் பிரமாண்ட எல்இடி டிஸ்ப்ளே

சென்னை: Thunivu Malaysia Promotions Pioneers 360 Degree LED Building Display. நடிகர் அஜித்தின் துணிவு படத்திற்கு மலேசியாவில் 360 டிகிரியில் பிரமாண்ட எல்இடி டிஸ்ப்ளேவை விநியோக நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

நடிகர் அஜித் திரைப்பட விளம்பரங்களின் ரசிகராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது வரவிருக்கும் துணிவு படத்தின் விநியோகஸ்தர்கள் இந்த உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் படத்தை விளம்பரப்படுத்துகிறார்கள்.

துபாயில் லைகா புரொடக்‌ஷன்ஸின் துணிவு போஸ்டர் நடுவானில் காட்சிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியாவில் உள்ள அஜித்தின் ரசிகர் மன்றத்துடன் இணைந்து துணிவு படத்தின் விநியோகஸ்தர் மாலிக் ஸ்ட்ரீம் கார்போர்டேஷன் இந்த டிஸ்பிளேவை செய்துள்ளது. இது அஜித் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு தமிழ் நடிகருக்கு முதன்முறையாக, நகரின் முக்கிய மையமான கோலாலம்பூரின் மையத்தில் உள்ள வானளாவிய கட்டிடத்தின் முகப்பில் துணிவு படத்திற்காக 360 டிகிரி LED டிஸ்ப்ளே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எச். வினோத் இயக்கிய துணிவு திரைப்படம் ஜனவரி 12ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. பேங்க் ஹீஸ்ட் என்டர்டெய்னரின் டிரெய்லர் வெளியான முதல் 24 மணி நேரத்திற்குள் 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.