Meena husband Vidyasagar: தென்னிந்திய நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்

Meena husband death

Meena husband Vidyasagar: தென்னிந்திய பிரபல பன்மொழி நடிகையான மீனா, தமிழ் சினிமாவில் நடித்திருப்பதோடு மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல‌ படங்களில் நடித்துள்ளார். இவரை அனைத்து மொழியினரும் தங்களுக்கு பிடித்த நடிகையாக அங்கீகரித்திருந்தனர்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது கணவர் வித்யாசாகர்கரோனா பாதிப்பால் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

2019- ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை நடிகை மீனா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். வித்யாசாகருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு நுரையீரல் தொற்று மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் மாற்று அறுவை சிகிச்சைக்கு நன்கொடை வழங்குபவர்கள் யாரும் இல்லாததால் அவருக்கு சிகிச்சை அளிக்க இயல‌வில்லை.

கடந்த ஜனவரி மாதம் வித்யாசாகர் கரோனா நோய் வாய்ப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்தார். ஆனால் நுரையீரல் பிரச்சனை காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அவர்அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், கரோனா நோய் பாதிப்பால் அவர் காலமானார்.

திருமணத்திற்கு பிறகும் நடிகை மீனா தொடர்ந்து நடித்து வந்தார். 2021-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலுடம் மலையாளத்தில் தர்சனம் 2 என்ற படத்தில் நடித்தார். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனதையடுத்து, கடந்த ஆண்டு தனது திருமண நாளில், திருமண வரவேற்பு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள மீனா, “என் வாழ்வில் வானவில் போல வந்து அழகாக ஓவியம் வரைந்தீர்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

must read : Actor Ajith: மீண்டும் பைக் பயணத்தில் நடிகர் அஜித்

must read : அக்னிபத்’ திட்டம் ஆழமான அர்த்தம் கொண்டது – நடிகை கங்கனா ரணாவத்

must read : TNHRCE krishnagiri Recruitment : 8ம் வகுப்பு தேர்ச்சியில் ரூ.50,000 சம்பளம்

Must read : TN Students: மேஜையை உடைத்த பள்ளி மாணவர்கள் தற்காலிக நீக்கம்

South India famous Actress Meena husband dead