Samantha is going abroad for further treatment: மேல்சிகிச்சைக்காக வெளிநாடும் செல்லும் சமந்தா

சென்னை: நடிகை சமந்தா ஆயுர்வேத மேல்சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தனது கணவரான நாக சைத்தானியாவை பிரிந்தது முதல் இவருக்கு திரையுலகில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. இதனைத்தொடர்ந்து இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தற்போது வீட்டில் ஓய்வில் உள்ளார்.

மேலும் சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாமல் நடிகை சமந்தா இருந்து வந்தார். இதனையடுத்து இவரது டுவிட்டர் பதிவில், தான் அரிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிக்சைப் பெற்று வரும் போதே யசோதா படத்துக்கான பின்னணி குரல் கொடுக்கும் பணியில் ஈடுப்பட்டார். அப்போதே சமந்தாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இவர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் வைரலானது.

பின்னர் ஒருசில நேர்காணல்களில் பங்கேற்று பேசிய சமந்தா, ரசிகர்களின் அன்பினாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே கடினமாக காலத்தை கடந்து வந்ததாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, சமந்தாவின் செய்தி தொடர்பாளர், சமந்தா தன்னுடைய ஹைதராபாத் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார். மேலும், சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்பட்டது. அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சமந்தா வீட்டிலேயே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகை சமந்தா ஆயுர்வேத மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியா செல்லும் சமந்தா, அங்கு சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று உடல்நலம் அடைந்த பின்னர் மீண்டும், படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

It has been reported that actress Samantha is going abroad for Ayurvedic treatment.