Nayanthara’s ‘Connect’ in 300 theatres: 300 திரையரங்குகளில் நயன்தாராவின் ‘கனெக்ட்’ திரைப்படம்

சென்னை: Director Vignesh Sivan has said that Nayanthara’s film ‘Connect’ has been released in 300 theatres. நயன்தாராவின் ‘கனெக்ட்’ திரைப்படம் 300 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபீஸா நடித்துள்ள படம், ‘கனெக்ட்’. அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். கரோனா காலகட்டத்தில் நடக்கும் கதை. தன் மகளுக்குப் பிடித்துள்ள பேயை, நயன்தாரா எப்படி விரட்டுகிறார் என்பது படம். வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள திரையரங்கில் நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியை இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கண்டு களித்தார்.

Also Read: Power Outage in Chennai: சென்னையில் வரும் 21ம் தேதி மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் சிவன், முதன்முறையாக இடைவெளி இல்லாத ஒரு திரைப்படத்தை உருவாக்கி உள்ளோம் என்றும், வரும் 22ம் தேதி, 300 திரையரங்குகளில் ‘கனெக்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளதாகவும், குழந்தைகளை நயன்தாரா நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள திரையரங்கில் நயன்தாரா வருகை தந்ததை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் திரையரங்கு முன்னர் குவிந்தனர். தொடர்ந்து ரசிகர்கள் அதிகரித்ததால் திரையரங்கு முன்பு இரும்பு தடுப்புகளை வைத்து ரசிகர்கள் உள்ளே நுழையாதபடி தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Also Read: Today Rasi Palan: இன்றைய ராசி பலன் (20.12.2022)

இடைவேளை இல்லாமல் ’கனெக்ட்’ திரைப்படம் உருவாகியுள்ளதால், இப்படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், 300 திரையரங்குகளில் ‘கனெக்ட்’ வெளியாகும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளதால் நயன்தாராவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.