mysskin salary in vijay 67: விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் மிஷ்கினுக்கு ரூ.10 லட்சம் சம்பளம்

சென்னை: For acting in Vijay’s 67th film, Mysskin was paid Rs. It is said that a salary of up to 10 lakhs has been discussed. விஜய்யின் 67வது படத்தில் நடிப்பதற்காக மிஷ்கினுக்கு ஒரு நாளைக்கு ரூ. 10 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தற்காலிகமாக பெயரிடப்பட்ட ‘தளபதி 67’ திரைப்படம் இந்த மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இறுதியாக திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜனவரி 30 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறோம் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். படத்தில் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் படத்துக்கு படம் ஒரு கேப் விடாமல் தொடர்ந்து படங்கள் நடித்து வருபவர் விஜய். இவரின் வாரிசு திரைப்படம் கடந்த வருட இறுதியில் தான் முடிவடைந்தது, படமும் கடந்த ஜனவரி 11ம் தேதி, அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படம் அஜித்தின் துணிவு படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதியது. மேலும் இந்த படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்து வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த படத்தில் விஜய் கமிட்டாகியுள்ளார். ஆம் படத்தை ரிலீஸ் செய்த கையோடு விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.

‘தளபதி 67’ பூஜை போடும்போது எடுக்கப்பட்ட வீடியோ, படப்பிடிப்பு செல்லும் போது எடுத்த வீடியோ என தயாரிப்பு குழு வெளியிட ரசிகர்கள் குதூகலத்தில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு மேலும் ரசிகர்களை பெரும் எதிர்ப்பார்ப்பை நோக்கி செல்ல வைத்துள்ளது. இந்த படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா 14 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மிஷ்கின் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு இவருக்கு ரூ. 10 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.