‘Leo’ tops 20 million views: 20 மில்லியன் பார்வைகளை கடந்து முதலிடத்தில் ‘லியோ’

சென்னை: The promo video of Vijay starrer ‘Leo’ crossed 20 million views on YouTube within 24 hours of its release. விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் ப்ரொமோ வீடியோ யூடியூபில் வெளியான 24 மணி நேரத்திற்குள், 20 மில்லியன் பார்வைகளை கடந்து முதலிடத்தில் உள்ளது.

நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி வசூல் சாதனையை படைத்து வருகிறது. இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வாரிசு கொண்டாட்டத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள், தளபதி 67 படத்தின் அப்டேட்டிற்காக எதிர்ப்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து, ‘தளபதி 67’ படத்தில் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நேற்று தளபதி 67 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தளபதி 67 படத்தின் தலைப்பு ’லியோ’ என்று அறிவிக்கப்பட்டது. இதனை ப்ரொமோ வீடியோவாக வெளியிட்டு படக்குழு அறிவித்தது. மேலும், ஆயுத பூஜையை முன்னிட்டு, அக்டோபர் மாதம் 19 ம் தேதி இப்படம் வெளியாகிறது.

இந்தநிலையில், இந்த ப்ரொமோ வீடியோ, வெளீயான 24 மணி நேரத்திற்குள், யூடியூபில் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், இது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.