Ilayaraja will be awarded an honorary doctorate: இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்

திண்டுக்கல்: Music composer Ilayaraja will be awarded an honorary doctorate by Prime Minister Narendra Modi tomorrow (11th). இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (11ம் தேதி) கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். மேலும் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 2018-2019 மற்றும் 2019 -2020ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டத்தை வழங்குகிறார். இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 300 பேர் அமரும் வகையிலான வளாகத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்குகிறார். இவரைத் தொடர்ந்து மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவிற்காக தனி விமான் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாளை மதுரை வருகிறார். இதனையொட்டி மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலைய ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலைய உள்வளாகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலைய உள்வளாகத்திற்குள் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முதல் 11ம் தேதி வரை 3 நாட்கள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 12ம் தேதியிலிருந்து வழக்கம்போல், பார்வையாளர்கள் உள்வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.