Govt Film Training Institute Admission: அரசு திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: Extension of time for admission to Government Film Training Institute: தமிழக அரசின் எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு (Tamilnadu Govt) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (Tamil Nadu Government M.G.R Film and Television Institute) கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.|

இந்நிறுவனத்தில், 2022-2023ஆம் கல்வி ஆண்டில் பின்வரும் பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை (First Year Student Admission) தொடர்பான விண்ணப்பப் படிவங்களை 22.07.2022க்குள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27.07.2022க்குள் சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பபட்டுள்ளது.

தற்போது, சி.பி.எஸ்.சி (CBSE) பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரப்பெற்ற நிலையில் மேற்குறிப்பிடப்பட்ட மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் 05.08.2022 வரையிலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பப் படிவம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 12.08.2022 வரையிலும் நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் விண்ணப்பப்படிவங்கள் (Application) மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்திடலாம் என்றும், மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விபரங்களை தகவல் தொகுப்பேட்டினை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மாணவர்களின் நலன் கருதி நீட்டிக்கப்படும் கால அவகாசத்தினை கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ, மாணவியரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.