Deepika Padukone : தீபிகா படுகோன் ரன்வீர் சிங் திருமணத்தில் விரிசல்:
அந்த ஒரு ட்வீட் தான் ரசிகர்களை கவலை கொள்ள வைத்தது

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் திருமணத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனுக்கும் ரன்வீர் சிங்குக்கும் இடையே எல்லாம் சரியாக இல்லை என்று வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினரான உமைர் சந்து ட்வீட் செய்துள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் (Deepika Padukone) உடல்நிலை மோசமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் திருமணத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினரான உமைர் சந்து, தீபிகா படுகோனுக்கும் ரன்வீர் சிங்குக்கும் இடையே எல்லாம் சரியாக இல்லை என்று தனிப்பட்ட முறையில் ட்வீட் செய்துள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட்டில் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் (Ranveer Singh) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் சினிமாவில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இதற்கிடையில் தீபிகாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக எல்லா இடங்களிலும் செய்தி பரவியது. தற்போது இந்த ஜோடி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அதிக அளவில் பின்தொடர்பவர்களை கொண்ட உமைர் சந்துவின் (Umair Sandhu) ட்வீட் பல விவாதங்களை கிளப்பியுள்ளது.

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இருவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். இருவரும் 2012 இல் சந்தித்து டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2018 இல் திருமணம் செய்து கொண்டனர். பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்கள் இருவரும். சமீபத்தில் ரன்வீர் சிங்கும் பிலிம்பேர் விருதை (Filmfare Award) பெற்றுள்ளார். இந்த நேரத்தில் தீபிகாவை மேடைக்கு அழைத்து பாராட்டி பேசினார். “நான் அவள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன், அவளை மிகவும் நேசிக்கிறேன். அவளிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். என் வாழ்க்கையில் தீபிகாவிற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று கூறினார். இந்த விவகாரம் குறித்து தீபிகா படுகோனே தற்போது எந்த பதிலும் தெரிவிக்காதது ஆச்சரியமாக உள்ளது.