Complaint Lodged Against A Man Who Looted Money: நடிகர் அஜித் பெயரை வைத்து மோசடி: மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்

நெல்லை: நடிகர் அஜித் (Complaint Lodged Against A Man Who Looted Money) பெயரைத் தவறாகப் பயன்படுத்தி தனது கணவரை சிவா என்பவர் ஏமாற்றியதாக இளம்பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பான புகார் ஒன்று அளித்திருப்பது சினிமா வட்டாரங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் ஒரு கூலி தொழிலாளியாக பிளைப்பு தேடி கேரளா சென்றுள்ளார். இவர் தீவிர அஜித்குமார் ரசிகராகவும் உள்ளார். அதே போன்று புதிய படங்கள் வெளியானால் தியேட்டரில் பேனர் வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். அந்த சமயத்தில் அஜித் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிவா நெல்லையை சேர்ந்தர் ஆவார். தன்னிடம் அறிமுகமான ஐயப்பனிடம் அஜித் ரசிகர் மன்றத் தலைவரின் மேலாளர் மிகவும் நெருக்கமானவர் என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி நடிகர் அஜித் மிகவும் கஷ்டப்படும் ரசிகர்களுக்கு மட்டும் தேர்வு செய்து வீடு கட்டிக்கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

அப்போது ஐயப்பன் பெயரையும் அந்த பட்டியலில் இணைத்து வீடு கிடைப்பதற்கு உதவுவதாக கூறியுள்ளார். ஏற்கனவே வறுமையில் இருக்கும் ஐயப்பனிடம் சிவா கூறியதை உண்மை என்று நம்பி எப்படியாவது தனக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து வீடு கட்டுவதற்கு எப்படியும் நடிகர் அஜித் சார்பாக 15 லட்சம் கொடுக்கப்படும் என சிவா கூறியுள்ளார். அதற்கு முன்பே பத்திரப்பதிவுக்கக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய ஐயப்பன் தான் வேலை செய்து சேமித்து வைத்த ஒரு லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் ஐயப்பனை நம்ப வைப்பதற்காக நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்ற அலுவலகத்திலிருந்து பேசுவதை போன்று ஒரு சிலரை வைத்து பேசி ஐயப்பனிடம இருந்து பணத்தை வசூல் செய்திருக்கிறார் சிவா. நீண்ட நாட்களாக பின்னர் ஐயப்பன் ஏமாந்திருப்பது தெரியவந்து சிவாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்னுடைய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு ஐயப்பன் கேட்டுள்ளார். ஆனால் பணம் தர மறுத்து ஐயப்பனுக்கு, சிவா கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன ஐயப்பன் நடந்த சம்பவம் பற்றி தன்னுடைய மனைவி ராஜேஸ்வரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஐயப்பனின் மனைவி ராஜேஸ்வரி இன்று (டிசம்பர் 20) நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் அஜித்குமாரின் பெயரை தவறுதலாக பயன்படுத்தி தனது கணவர் சிவாவை ஏமாற்றிவிட்டனர் எனவும் அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கு உதவுமாறு கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.

மேலும், அஜித் ரசிகர் மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி தனது குடும்பத்தாரை ஏமாற்றியதை போன்று சில ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தாரையும் சிவா ஏமாற்றி வந்திருப்பதாக ராஜேஸ்வரி கூறினார். புகார் கொடுக்க வந்திருப்பதால் சிவா தனது குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜேஸ்வரி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தியை பார்க்க:Bus-car collision near Kovilpatti: கோவில்பட்டி அருகே பஸ் – கார் நேருக்குநேர் மோதல்; 3 மாணவர்கள் உயிரிழப்பு