BaBa ReRelease: வெளியானது மெருகேற்றப்பட்ட பாபா படத்தின் ட்ரெய்லர்

சென்னை: The trailer of Merukeepattana Baba has been released. 20 ஆண்டுகளுக்குப்பின் மெருகேற்றப்பட்ட பாபா படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

கடந்த 2002ம் ஆண்டு ரஜினி நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாபா. ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படையப்பா படம் வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு பின் ரஜினி நடித்து வெளியான இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியபோதிலும், ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என கூறலாம்.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் பாபா படத்தை ரஜினிகாந்த் மறுவெளியீடு செய்கிறார். மீண்டும் எடிட் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் மெரூகூட்டப்பட்ட பாபா படம் விரைவில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. புதிதாக சில வசனங்களும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் அதற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் டப்பிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். ரஜினி டப்பிங் பேசும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

மீண்டும் புதிய வடிவில் ரிலீசாகும் #பாபா திரைப்படத்தில் ஏழு மந்திரத்திற்கு பதிலாக ஐந்து மந்திரங்கள் அடங்கிய காட்சிகள் மற்றும் ரஜினி சார் அவர்கள் தாய் தந்தையர் பற்றி பேசும் புதிய காட்சியை சேர்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாபா மறுவெளியீட்டை கொண்டாட ரஜினி ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த ட்ரெய்லரை ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், என்றென்றும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் ஒரு திரைப்படம் … பாபா ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லர் வீடியோ சில நிமிடத்திலேயே நீக்கப்பட்டது. பின்னர் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

இந்த படம் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.