Attack on actor Vishal’s house: நடிகர் விஷால் வீடு மீது தாக்குதல்

சென்னை: Miscreants pelt stones, damage windows of actor Vishal’s house in Chennai. சென்னையில் நடிகர் விஷாலின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை மர்ம நபர்கள் கற்களை வீசி சேதப்படுத்தியுள்ளனர்.

நடிகர் விஷால் வீட்டின் மீது மர்மநபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதையடுத்து, நடிகர் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் வீட்டின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.சென்னையில் உள்ள நடிகர் விஷாலின் வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல் வீசி ஜன்னல்களை சேதப்படுத்தினர். இந்த சம்பவம் முழுவதும் வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதன் அடிப்படையில் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். சிவப்பு நிற காரில் வந்த மர்மநபர்கள் விஷாலின் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அவர் புகார் அளித்துள்ளார். மேலும், கல் வீசப்பட்டதற்கான சிசிடிவி காட்சிகளையும் அவர் சமர்ப்பித்தார்.

அதில் விஷாலின் குடியிருப்புக்கு அருகில் ஒரு கார் வந்து செல்வதையும், பயணியின் பக்கத்திலிருந்து ஒருவர் இறங்குவதையும், அவர் வீட்டின் மீது கற்களை வீசி சில நொடிகளில் அதே காரில் வேகமாக சென்றுள்ளதும் அந்தக் காட்சிகள் காட்டுகின்றன. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். நடிகர் விஷால் வீடு தாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஷால் தற்போது துப்பறிவாளன் 2, மார்க் ஆன்டனி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். லத்தி போஸ்ட் புரொக்டக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.