Amala Paul: மணிரத்ன‌ம் பட வாய்ப்பை நடிகை அமலா பால் நிராகரித்தது ஏன்?

பிரபல இயக்குனர் மணிரத்ன‌ம் (Maniratham) சினிமா துறையில் முத்திரை பதித்தவர். சினிமாவில் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற பல நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆசைப்படுகிறார்கள்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் (Maniratham) சினிமா துறையில் முத்திரை பதித்தவர். சினிமாவில் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற பல நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் நடிகை அமலா பால் மட்டும் மணிரத்னத்தின் வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

அமலா பால் தொடர்ந்து இரண்டு முறை வாய்ப்பு மறுத்துள்ளார். (Maniratham) அமலா பால் மணிரத்னம் இயக்கும் “பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

“பொன்னியின் செல்வன்” ((Ponniyin Selvan) விரைவில் திரைக்கு வரவிருக்கும் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மணிரத்னம் இயக்கி உள்ளார். இது பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட இரு பாகங்களின் முதல் பாகம் ஆகும். இளங்கோ குமரவேல், பி.ஜெயமோகன் ஆகியோருடன் இணைந்து மனிரத்னம் இதற்கான திரைக்கதையை எழுதியுள்ளார்.

இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி (Actors Vikram, Karthik, Jayam Ravi), ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, அஸ்வின் ககுமனு, சோபிதா துலிபாலா மற்றும் சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், ரகுமான் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசைமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவையும் ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பையும் தோட்டா தரணி வடிவமைப்பையும் புரிந்துள்ளனர்.

மல்டி ஸ்டார்களான‌. சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.(Amala Paul) அமலா பால் முக்கிய வேடத்தில் நடிக்க தேர்வு செய்யப் பட்டார். அவரும் ஆடிஷனில் கலந்து கொண்டு படத்தில் நடிக்க தேர்வானார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஆனதால், அதில் இருந்து அமலா பால் விலகியுள்ளார்.

அமலா பால் (Amala Paul) ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது, நான் மணிரத்ன‌த்தின் தீவிர ரசிகை. இந்தப் படத்தில் நடிக்க் முடியாமல் போனதற்கு முதல் முறையாக வருத்தப்பட்டேன். 2021 இல் அதே படத்துக்காக என்னை மீண்டும் அழைத்தார்கள். அப்போது எனக்கு அந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் இல்லை. அதனால் அந்தப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்தேன். அப்படியொரு சந்தர்ப்பம் கை நழுவிப் போனதில் வருத்தமில்லை என தெரிவித்துள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ (Ponniyin Selvan) திரைப்படம் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படம் பெரிய பட்ஜெட் படம். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.