Actress Rambha Car Accident: கார் விபத்தில் உயிர் தப்பிய நடிகை ரம்பா; மகள் மருத்துவனையில் அனுமதி

சென்னை: Actress Rambha escapes with minor injuries in Canada car accident. கனடாவில் நடந்த கார் விபத்தில் நடிகை ரம்பா லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

நடிகை ரம்பா, 90களில் உள்ளத்தை அள்ளித்தா, காதலா காதலா, அருணாச்சலம் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்.

கணவர் மற்றும் குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வரும் நடிகை ரம்பா இந்திரகுமார், நேற்று கார் விபத்தில் சிக்கினார். தனது குழந்தைகள் மற்றும் அவர்களின் ஆயாவுடன் காரில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நடிகை ரம்பா சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவரும் அவரது குழந்தைகளும் உடனடியாக டொராண்டோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து நடிகை ரம்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் மற்றொரு கார் மோதியது! “Me with children and my nany” நாங்கள் அனைவரும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம். என் குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். மோசமான நாட்கள் மோசமான நேரம். தயவு செய்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என உருக்கமாக ரம்பா பதிவிட்டுள்ளார்.