Actor Vishal visit Dharmastala : பிரபல தமிழ் நடிகர் விஷால் தர்மஸ்தலா கோவிலுக்கு வருகை புரிந்து சிறப்பு தரிசனம்

தமிழ் நடிகர் விஷால் தர்மஸ்தலா வருகை புரிந்து, நண்பர்களுடன் சிறப்பு தரிசனம் செய்தார்.

மங்களூர்: Actor Vishal visited the Dharmasthala temple and had a special darshan : புண்ணிய தலமான தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்கு பிரபல தமிழ் நடிகர் விஷால் வருகை தந்தார். மஞ்சுநாதரை தரிசனம் செய்து சிறப்பு பூஜை செய்தார் (He had darshan of Manjunadha and performed special pooja). தங்களுக்கு பிடித்த நடிகரை பார்த்ததும் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க தயாராகிவிட்டனர்.

கர்நாடக மாநிலம் தென் கன்னடம் மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடி தாலுகாவில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில் (Dharmasthala Manjunatha Swamy Temple in Belthangadi Taluk in South Kannada District). மாநிலத்தின் முக்கியமான மதத் தலமாகும். இங்கு வந்து தரிசனம் செய்தால், பல பிரச்னைகள் தீரும் என நம்பப்படுகிறது. கர்நாடகத்தில் உள்ள அரசியவாதிகள் முதல் நடிகர்கள் வரை இந்த கோயிலுக்கு வராதவர்களே யாரும் கிடையாது எனக் கூறப்படுகிறது.

800 ஆண்டு பழமையான மஞ்சுநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சிவன் கோயிலாகும் (It is an 800 year old Shiva temple dedicated to Manjunath). தற்போது தமிழ் நடிகர் விஷால் தர்மஸ்தலாவிற்கு வருகை தந்துள்ளது சுவாரஸ்யமாக உள்ளது. இங்கு நண்பர்களுடன் விஷால் கடவுளை சிறப்பு தரிசனம் செய்து வழிபட்டார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்த பிறகு, அவரது சமாதி வந்து அஞ்சலி செலுத்திய விஷால், பின்னர் அவரது குடும்பத்தினர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நடிகர் புனித் ராஜ்குமார் (Actor Puneeth Rajkumar) செய்து வந்த உதவிகளை கேட்டறிந்து, அவர் உதவி வந்த‌ சக்தி தாம் ஆசிரமத்தை முன்னெடுத்துச் செல்வதாக உறுதியளித்தார். இதனையடுத்து மைசூரில் உள்ள சக்தி தாம் ஆசிரமத்திற்கும் சென்றுசெய்தி வெளியிட்டார். தற்போது தமிழில் விஷால் நடித்த துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி, பாரசிக ராஜா ஆகிய படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில் அவர் கர்நாடக மாநிலம் தென் கன்னடத்தில் உள்ள தர்மஸ்தலாவிற்கு வந்து சிறப்பு வழிபாடு செய்துள்ளது ஆச்சரியத்தையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது.