ஜொமோட்டோவுக்கு ஆறு மாதங்களில் ரூ.87,000 கோடி இழப்பு

ஜொமோட்டோவுக்கு ஆறு மாதங்களில் ரூ.87,000 கோடி இழப்பு
ஜொமோட்டோவுக்கு ஆறு மாதங்களில் ரூ.87,000 கோடி இழப்பு

Zomato: ஜொமோட்டோ நிறுவனத்துக்கு ஆறு மாதங்களில் ரூ.87,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜொமோட்டோ பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. தற்போது 52 வார குறைந்தபட்ச விலையில் இந்த பங்கு வர்த்தகமாகி வருகிறது. வெள்ளிக்கிழமை குறைந்தபட்சமாக ரூ.57 ரூபாய் வரை இந்த பங்கு சரிந்தது. இதனால் ஜொமோட்டோவின் சந்தை மதிப்பு ரூ.45,381 கோடியாக குறைந்தது.

நவம்பர் மாதத்தில் இந்த பங்கு உச்சபட்சமாக 169.10 ரூபாய் வரை சென்றது. அப்போது சந்தை மதிப்பு 1.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதில் இருந்து இப்போது சுமார் 87,000 கோடி ரூபாய் சரிவை சந்தித்திருக்கிறது. இந்த பங்கு ரூ76 க்கு ஐபிஓ மூலம் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

தற்போது ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை உயர்த்தி இருப்பதால் நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே ஜொமோட்டோ நிறுவனம் இன்னும் லாப பாதைக்கு திரும்பவில்லை என்பதால் பங்கு சரிந்துவருகிறது. அடுத்த நிதி ஆண்டில்தான் இந்த பங்குகள் லாப பாதைக்கு திரும்பும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Zomato Wipes off Rs 88,000 Crore M-Cap in Six Months; Hits New All-Time Low

இதையும் படிங்க: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்