Whatsapp: “10 கோடி பேர் வரை பணப்பட்டுவாடா சேவை பெறலாம்” – வாட்ஸ்அப் நிறுவனம்

வாட்ஸ்அப் நிறுவனம்
வாட்ஸ்அப் நிறுவனம்

Whatsapp: வாட்ஸ்ஆப் நிறுவனம் 10 கோடி வாடிக்கையாளர்கள் வரை பணப்பட்டுவாடா சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

NPCI எனப்படும் தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. தற்போது 4 கோடி பேர் வரை பணப்பட்டுவாடா சேவை வழங்க வாட்ஸ்அப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அது 10 கோடியாக உயர உள்ளது.

இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு ஊடகங்களில் ஒன்றாக விளங்கும் வாட்ஸ்ஆப் பணப்பட்டுவாடா சேவையிலும் ஈடுபட்டு வருகிறது. எனினும் ஆன்லைன் பணப்பட்டுவாடா சந்தையில் அந்நிறுவனம் 0.02 சதவிகித பங்கை மட்டுமே வகிக்கிறது.

இந்நிலையில் தனது பணப்பட்டுவாடா தளத்தை விரிவாக்க கிடைத்துள்ள அனுமதி மூலம் வாட்ஸ்அப் பெரிய அளவில் கால் பதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஆன்லைன் பணப்பட்டுவாடா சந்தையில் ஃபோன் பே 49 சதவிகித பங்கையும் கூகுள் பே 35 சதவிகித பங்கையும் வகிக்கின்றன. பேடிஎம் 3ஆம் இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: Transport fare hike: ஆந்திரா, கேரளாவில் பஸ், டாக்சி கட்டணங்கள் உயர்வு