TVS land sales: சென்னை அண்ணாசாலையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான டிவிஎஸ் நிறுவனத்தின் நிலம் விற்பனைக்கு வந்துள்ளது.
டிவிஎஸ் சுந்தரம் மோட்டார் நிறுவனத்திற்கு அண்ணாசாலையில் 89 கிரவுண்ட் அதாவது 2 லட்சத்து 14 ஆயிரம் சதுர அடி நிலம் சொந்தமாக உள்ளது. அண்ணாசாலையில் இருந்து வொயிட் சாலை வரை டிவிஎஸ் நிறுவனத்தின் நிலம் நீண்டிருக்கிறது.
தற்போது சுந்தரம் ஹோண்டா என்ற பெயரில் கார் விற்பனை மற்றும் பழுது நீக்கும் நிலையமாக செயல்பட்டு வரும் இந்த நிலம் தான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கிரவுண்ட் நிலத்திற்கு 6 முதல் 6.5 கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி டிவிஎஸ்-ன் அண்ணாசாலை நிலம் சுமார் 550 கோடி ரூபாய்க்கு விலை போகும் என்று கூறப்படுகிறது. சென்னையின் அடையாளமாக இருக்கும் இந்த நிலத்தினை கையகப்படுத்த பிரபல கட்டுமான நிறுவனங்களான பிரஸ்டீஜ், பூர்வங்கரா, பிரிகேட் ஆகிய குழுமங்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் பிரஸ்டீஜ் குழுமம் 550 கோடி ரூபாய் முதல் 600 கோடி ரூபாய் வரை விலை கொடுத்து டிவிஎஸ் அண்ணாசாலை சொத்தினை இறுதி செய்திருப்பதாகவும் ரியல் எஸ்டேட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும் சொத்து விற்பனை பரிவர்த்தனைகள் குறித்து டிவிஎஸ் நிறுவனம் தகவல் எதுவும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.
Iconic TVS property in Chennai’s Anna Salai up for sale
இதையும் படிங்க: NEET: சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்



