Karnataka CM declares 3-day holiday to schools and colleges : கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை !

Karnataka CM declares 3-day holiday to schools and colleges : கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை !
Karnataka CM declares 3-day holiday to schools and colleges : கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை !

Karnataka CM declares 3-day holiday to schools and colleges : கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ‘ஹிஜாப்’க்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை விடுமுறை அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பியூ கல்லூரிகளில் ஹிஜாப் விவகாரம் பெரிதாக்கிக்கொண்டு இருக்கிறது. அங்கு வரிசையாக பல்வேறு கல்லூரிகளில் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பியூ கல்லூரிகளில் இந்து மாணவர்கள் சிலர் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து மாணவ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவிகள் எதிராக இந்த எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.

அது மட்டுமின்றி இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் காவி துண்டு அணிந்து வகுப்பிற்கு வந்து போராட்டமும் நடத்தி உள்ளனர்.Karnataka CM declares 3-day holiday to schools and colleges

அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் கர்நாடக மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று பொம்மை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

உடுப்பி, ஷிவமொக்கா, பாகல்கோட் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இன்று ஹிஜாபிற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடந்த போராட்டங்களின் போது பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க : NEET: சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்