Saving Scheme: சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு

small-savings-scheme-interest-rates-going-to-be-reduced-soon
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு

Saving Scheme: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) வட்டி விகிதம் சில நாட்களுக்கு முன்னர்தான் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதனால் பிஎஃப் சந்தாதார்கள் அதிர்ச்சியடைந்தனர். கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக பிஎஃப் வட்டியில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது வட்டி விகிதம் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பிஎஃப் வட்டி ஒருபுறம் குறைக்கப்பட்டாலும், மற்றொரு புறம் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. பல்வேறு வங்கிகள் தங்களது ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. அதேநேரம், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை விட அதிகமாக இருக்கின்றன. எனவே சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைக்க வாய்ப்பு உள்ளது.

ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து கடந்த 2021 டிசம்பர் 31ஆம் தேதியில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது இவற்றின் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் மூலம் தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றப்படவில்லை. ஆனால் இப்போது ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களோடு ஒப்பிடும்போது சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் அவற்றைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் மார்ச் 31ஆம் தேதி நடைபெறுகிறது.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்:

பொது வருங்கால வைப்பு நிதி – 7.1 சதவீதம்

சுகன்யா சம்ரிதி யோஜனா – 7.6 சதவீதம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் – 7.4 சதவீதம்

தபால் நிலைய சேமிப்பு கணக்கு – 4 சதவீதம்

ரெக்கரிங் டெபாசிட் – 5.8 சதவீதம்

டைம் டெபாசிட் – 5.5 முதல் 6.7 சதவீதம்

மாத வருமான திட்டம் – 6.6 சதவீதம்

இதையும் படிங்க: Minister Raja Kannappan: பொது வேலைநிறுத்தத்தின்போது பஸ்களை வழக்கம்போல் இயக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜகண்ணப்பன்