Russian banks: விசா, மாஸ்டர் கார்டு சேவை நிறுத்தம்

russian-banks-switch-to-chinese-unionpay-after-visa-mastercard-suspend
மாஸ்டர் கார்டு சேவை நிறுத்தம்

Russian banks: உக்ரைன் மீது உக்கிரமாக படையெடுத்து போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்த நிலையில், அமெரிக்க பன்னாட்டு நிதி மற்றும் கட்டணச் சேவைகள் அமைப்பு நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகிய நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருந்தன.

உக்ரைன் மீது யுத்தம் புரிந்து வரும் ரஷ்யாவுக்கு பல்வேறு உலக நாடுகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. கூகுள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மாதிரியான நிறுவனங்கள் கூட சில தடைகளை அறிவித்திருந்தன. அதே நேரத்தில் சர்வதேச அளவில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டருக்கு ரஷ்யா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Russian banks: விசா, மாஸ்டர் கார்டு சேவை நிறுத்தம்

இத்தகைய நிலையில் ரஷ்யா நாட்டு வங்கிகள் Mir மற்றும் யூனியன் பே மாதிரியான நிதிச் சேவைகள் மற்றும் கட்டணச் சேவை அமைப்பு நிறுவன அட்டைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாம்.

இதில் Mir ரஷ்யாவின் சென்ட்ரல் வங்கி நிர்வகித்து வரும் பேமெண்ட் சிஸ்டமாகும். அதே போல யூனியன் பே சீன தேச பேமெண்ட் சிஸ்டமாகும். தற்போது ரஷ்ய வங்கிகளால் கொடுக்கப்பட்டுள்ள விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளை ரஷ்யாவை தவிர உலகின் பிற நாடுகளில் பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளன. அதனால் அந்த அட்டைகளை உள்நாட்டு அளவில் மக்கள் பயன்படுத்துவதில் சிக்கல் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நிதி சார்ந்த மற்றும் பயணம் மேற்கொள்ள தடைகள் விதித்துள்ளன.

Russian banks turn to China after Visa, Mastercard suspend services

இதையும் படிங்க: Sensex falls 1400 points : சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் சரிந்தது