எந்த வடிவில் இருந்தாலும் அப்பளத்துக்கு ஜி.எஸ்.டி கிடையாது

‘என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும், எந்த வடிவில் இருந்தாலும், ‘பப்பட்’ எனப்படும் அப்பளத்துக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு உண்டு’ என, மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.

பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, சமூக வலை தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். ‘வட்ட வடிவில் உள்ள பப்பட்க்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு உண்டு. ஆனால், சதுர வடிவில் இருந்தால் வரி விதிக்கப்படுகிறது’ என, அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.