இந்தியாவில் உள்ள இரண்டு ஆலைகளையும் மூடுகிறது ஃபோர்டு நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது இரண்டு உற்பத்தி ஆலைகளையும் மூடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

போர்டு மாற்றியமைக்கிறது. அதன்படி சென்னை, சனந்தில் உள்ள ஆலைகள் இனி கார் உற்பத்தி செய்யாது. 2021- 4வது நிதியாண்டு காலாண்டுடன் முடிவடையும் காலத்துடன் ஏற்றுமதிக்கான வாகன உற்பத்தியை சனந்த் ஆலை நிறுத்திக் கொள்ளும்.

அதேபோல் சென்னையில் உள்ள இன்ஜின் தயாரிப்பு மற்றும் வாகனங்களை அஸெம்பிள் செய்யும் ஆலை 2022ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுடன் பணியை நிறுத்திக் கொள்ளும்.

அதுவரை, ஃபோர்டு நிறுவனம் தனது தயாரிப்புகளை இறக்குமதி மூலம் இந்தியாவில் விற்பனை செய்வதோடு இப்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து டீலர்கள் சேவைகளை வழங்க உதவும்.இவ்வாறு அந்த ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.