Flipkart offer: அட்டகாசமான Poco 5G போன் வெறும் ரூ. 1249

fantastic-flipkart-deal-buy-poco-m4-pro-5g-smartphone-for-just-rs-1249
அட்டகாசமான Poco 5G போன் வெறும் ரூ. 1249

Flipkart offer: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் அதன் பயனர்களுக்கு அவ்வப்போது அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. பொதுவாக, பிளிப்கார்டில் பல விற்பனைகள் அதாவது சேல்கள் நடக்கும்.

எனினும் சேல் எதுவும் இல்லாதபோதும், பிளிப்கார்டில் பொருட்களை மலிவாக வாங்கலாம். இந்த பதிவில் நாம் 5ஜி ஸ்மார்ட்போனான போகோ எம்4 ப்ரோ 5ஜி (Poco M4 Pro 5G) இல் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி காணலாம். பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனை வெறும் 1,249 ரூபாய்க்கு வாங்கலாம்.

Poco M4 Pro 5G சந்தையில் ரூ.16,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனை 11% தள்ளுபடிக்கு பிறகு 14,999 ரூபாய்க்கு வாங்க முடியும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட் கொண்டு இந்த போனை வாங்கினால், 750 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் போனின் விலை 14,249 ரூபாயாக குறையும்.

இந்த போனில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தினால், இந்த ஸ்மார்ட்போனை ரூ.1,249 க்கு வாங்கலாம். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், 13 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த போனை வெறும் ரூ.1,249க்கு வாங்கலாம்.

போகோவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. மீடியா டெக் டைமென்ஷன் 810 சிப்செட்டில் பணிபுரியும் இந்த ஃபோனில், 6.6 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே மற்றும் 5,000mAh பேட்டரியுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பும் உள்ளது. இந்த கேமரா அமைப்பில் 50எம்பி மெயின் சென்சார் மற்றும் 8எம்பி இரண்டாவது சென்சார் இருக்கும். இதில் உங்களுக்கு 16எம்பி முன் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Russia-Ukraine Crisis: உக்ரைனில் 847 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்- ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு