Russia: ரஷ்யா அணு ஆயுத போரை நோக்கி செல்கிறாதா

is-russia-move-towards-nuclear-war-nuclear-war-evacuation-drill-raises-questions
ரஷ்யா அணு ஆயுத போரை நோக்கி செல்கிறாதா

Russia: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடர்ந்து 25வது நாளாக நீடிக்கிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உலகெங்கிலும் உள்ள நாடுகள் ரஷ்யா மீது அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த உதவுமாறு வலியுறுத்துகிறார். ஏற்கனவே போர்க்களத்தில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அணு ஆயுதப் போரை நோக்கி புடின் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

சில நேரங்களில் ராக்கெட்டுகள், சில நேரங்களில் ஏவுகணைகள், சில நேரங்களில் குண்டுகள் மற்றும் சில நேரங்களில் டாங்கிகள் என உக்ரைனை அழிக்க ரஷ்யா அனைத்து வித ஆயுதத்தையும் ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் அணு ஆனுத தாக்குதலும் நடத்தப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது

புட்டினின் அடுத்த திட்டம் அணு ஆயுதப் போர் என கிரெம்ளின் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். புடின் சமீபத்தில் ‘அணுசக்தி போர் மூண்டால் மக்களை பாதுகாப்பாக வெளியேறுவது தொடர்பான பயிற்சி’ ஒன்றை நடத்த கோரியுள்ளார் என கிரெம்ளின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதினின் இந்த கோரிக்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் மோதல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் விளாடிமிர் புடின் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அணு ஆயுதப் போரின் போது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் செயலே ‘அணுசக்தி போர் வெளியேற்றப் பயிற்சி’ ஆகும்.

இதையும் படிங்க: BJP: நாளை உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

உக்ரைனுடனான போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணுசக்தி போர் வெளியேற்ற பயிற்சிக்கான புடினின் திட்டம் பேரழிவு தரக்கூடியதாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். உக்ரைன் மீதான தாக்குதலில் கிஞ்சால் என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த ஏவுகணையின் உதவியுடன் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் கொடுத்த ஆயுதக் கிடங்கை ரஷ்யா அழித்தது. இந்த அதிவிரைவு ஏவுகணை மிகவும் ஆபத்தானது. இந்த ஏவுகணை அணுகுண்டுகளையும் வீசும் திறன் கொண்டது. உக்ரைனை எச்சரிக்க ரஷ்யா இதைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்றும் அமெரிக்காவும் எச்சரித்துள்ளது.

முன்னதாக, ரஷ்ய ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள், அணுசக்தி யுத்த அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு புடின் தனது குடும்பத்தை ரகசிய இடத்திற்கு அனுப்பியதாகக் கூறியது. புடின் தனது குடும்பத்தினரை, மிகவும் பாதுகாப்பான நிலத்தடி நகரத்திற்கு அனுப்புவதாகவும் கூறப்பட்டது.

விளாடிமிர் புதின் தொடர்ந்து நேட்டோ நாடுகளை மிரட்டி வருகிறார், மேலும் உக்ரைன் பிரச்சனையில் தலையிட்டால் வரலாற்றில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு புடின் தனது அணுசக்தி இராணுவத்தையும் உஷார் நிலையில் வைக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Russia-Ukraine Crisis: உக்ரைனில் 847 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்- ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு