ATM WITHDRAWAL: ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு..!

ATM WITHDRAWAL: வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வதற்காக ஏடிஎம் வசதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அந்த ஏடிஎம் வசதிக்காக பரிவர்த்தனைக் கட்டணமாக வங்கி நிர்வாகம் வசூலித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மில் மாதம் ஒன்றுக்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாதம் ஒன்றுக்கு மூன்று முறை கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 20 ரூபாய் சேவைக் கட்டணமும் மற்ற வங்கிகளில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23.60 பரிவர்த்தனைக் கட்டணமும் பிடித்தம் செய்யப்படும் என்பது தெரிந்ததே.

ஆனால் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 21 ரூபாயாகவும், அதே போல் மற்ற வங்கி ஏடிஎம் பயன்படுத்தினால் 25 ரூபாயும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் செலவுகள் அதிகரிப்பதால் இந்த கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு சில வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்தி உள்ள நிலையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வங்கிகளும் பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு