Salary hike: கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்

salary hike in corporate companies
கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்

Salary hike: கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது, ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தன. அதேசமயம், கொரோனா லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு பொருளாதார நெருக்கடி, ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் பண வீக்கம் காரணமாக ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது பணியாளர்களை வேலையை விட்டு வெளியேற்றி வருகின்றன.

இந்நிலையில் எம்என்சி எனப்படும் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களது பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், கொரோனா மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பல்வேறு நிறுவனங்களில் சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பரவலின் இரண்டாம் ஆண்டில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதால், பொருளாதாரமும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது.

எனவே ஐ.டி. நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணியாற்றி வரும் தலைசிறந்த ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகளை வழங்கி வருகின்றன. தற்போது இந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வு குறித்த பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்துள்ள நிலையில், அக்சென்ச்சர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற முன்னணி MNC நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியதோடு, அவர்களுக்கு பதவி உயர்வும் அளித்துள்ளன.

அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான சம்பள வரம்பை $160,000 அமெரிக்க டாலர்களில் இருந்து $350,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளது. பிப்ரவரி 2022ம் ஆண்டு படி, அமேசான் நிறுவனம் வழங்கி வந்த அதிகபட்ச அடிப்படை சம்பளமான $160,000 டாலர்களை இரட்டிப்பாக்குவதாக அதாவது, $350,000 வரை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து Geekwire-யில் வெளியாகியுள்ள தகவலின் படி “அமேசான் தனது கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான அதிகபட்ச அடிப்படை ஊதியத்தை $350,000 ஆக உயர்த்தும், இதற்கு முன்னதாக $160,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், சிறந்த திறமையாளர்களைச் சேர்ப்பதற்கும், இருக்கும் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் ஊதிய உயர்வு உதவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அறிவிக்கவில்லை என்றாலும், உயர் அதிகாரிகளுக்கான ஊதியத்தை உயர்த்தியுள்ளதாக ஜனவரியில் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கூகுள் தனது நான்கு மூத்த நிர்வாகிகளின் அடிப்படை சம்பளத்தை $650,000ல் இருந்து $1 மில்லியனாக உயர்த்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய நிறுவனம் US செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் தாக்கல் செய்தபடி, தலைமை நிதி அதிகாரி ரூத் போரட், மூத்த துணைத் தலைவர் பிரபாகர் ராகவன் (கூகுள் சர்ச் இன்ஜின் பொறுப்பு); மூத்த துணைத் தலைவர் மற்றும் தலைமை வணிக அதிகாரி பிலிப் ஷிண்ட்லர்; மற்றும் கென்ட் வாக்கர், உலகளாவிய விவகாரங்களின் தலைவர் மற்றும் தலைமை சட்ட அதிகாரி ஆகியோருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் “வரவு செலவுக்கான உலகளாவிய தகுதி பட்ஜெட்டை இருமடங்காக உயர்த்தியுள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாதெல்லா தனது மின்னஞ்சலில் “எங்கள் வாடிக்கையாளர்களையும், பங்குதாரர்களையும் மேம்படுத்த நீங்கள் செய்யும் அற்புதமான பணியின் காரணமாக, எங்கள் திறமைக்கு அதிக தேவை இருப்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் காண்கிறோம். தலைமைக் குழுவில், உங்கள் தாக்கம் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் ஆழமாகப் பாராட்டப்பட்டது – அதற்காக நான் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி சொல்ல விரும்புகிறேன். அதனால் தான் நாங்கள் உங்கள் ஒவ்வொருவரிடமும் நீண்ட கால முதலீடுகளை செய்கிறோம்” எனகுறிப்பிட்டுள்ளார்.

Amazon, Google and other tech companies gave massive hike to their employees

இதையும் படிங்க: World No Tobacco Day: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்