Insure the paddy crop by 15th November : நவ. 15 ஆம் தேதிக்குள் நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள அறிவுறுத்தல்

சென்னை: The Agriculture Department has advised farmers to get insurance by November 15 :சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை (Agriculture Farmers Welfare Department) வெளியிட்ட செய்திக் குறிப்பில், பயிர்களில் உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழக வேளாண் பெருமக்களை பாதுகாக்க, முதல்வரின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் (Natural calamities like floods and storms) பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், முதல்வர் 2022-23 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக்கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து, உத்தரவிட்டுள்ளார்.

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று (Chamba rice cultivation is going on in full swing) வருகிறது. சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ள 24.13 இலட்சம் ஏக்கர் நெற்பயிரில், 5.90 இலட்சம் ஏக்கர், 10.38 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் (Thanjavur, Nagapattinam, Mayiladuthurai, Tiruvarur), மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.11.2022 ஆகும்.

கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல் (Kanyakumari, Dindigul, Virudhunagar, Namakkal), திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இம்மாவட்ட நெல் விவசாயிகள் 15.12.2022க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் (இ-சேவை மையங்கள்) காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், https://pmfby.gov.in/ என்ற இணையதளத்தில் ”விவசாயிகள் கார்னர்” (Farmers Corner) எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரிடையாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம்