மத்திய அரசிடம் சரணடைந்தது ட்விட்டர் நிறுவனம் !

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சமூகவலைத்தளமான ட்விட்டரில் அரசை விமர்சித்தும் வன்முறையை தூண்டும் பதிவுகளை போடுகின்றனர்.

இந்த பதிவுகள் மற்றும் கணக்குகளை நீக்குமாறு மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு ஆணையிட்டது.ஆனால் மிகக் குறைந்த கணக்குகளை மட்டுமே டுவிட்டர் நிறுவனம் ரத்து செய்தது. கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.

மேலும் கணக்குகளையும் ரத்து செய்யாவிட்டால் இந்தியாவிலுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகிகளைக் கைது செய்யவும் தயங்க மாட்டோம் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடைசியில் மத்திய அரசின் மிரட்டலுக்கு டுவிட்டர் நிறுவனம் பணிந்தது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதில் 97 சதவீதம் டுவிட்டர் கணக்குகள் ரத்து செய்யப்பட்டன.