World bank: இலங்கைக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி உதவி

world-bank
இலங்கைக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி உதவி

World bank: பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கை திவாலாகும் நிலைக்கு சென்று விட்டது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பட்டினியில் வாடும் நிலைக்கு மக்கள் சென்று கொண்டிருப்பதாக அரசு கூறியுள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து மக்களை மீட்பதற்கு உதவுமாறு சர்வதேச நாடுகளுக்கும், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இதில் முக்கியமாக உலக வங்கியிடம் நிதி உதவி கேட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, இலங்கை வெளியுறவு மந்திரி பெய்ரீஸ் உலக வங்கியின் இலங்கை-மாலத்தீவு மேலாளர் சியோ கண்டாவை கடந்த வாரம் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், இலங்கைக்கு சர்வதேச நிதியம் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடை நாடுகள் மூலம் நீண்ட கால உதவி கிடைக்கும் வரை உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்த கடினமான சூழலில் இருந்து இலங்கையை மீட்பதற்கு 700 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.5 ஆயிரம் கோடி) வருகிற மாதங்களில் வழங்குவதாக சியோ கண்டா உறுதியளித்துள்ளார்.

இதைப்போல ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் ஐ.நா. ஆகியவற்றுடன் இணைந்து, ஏற்கனவே உறுதியளித்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும் உலக வங்கி உதவும் எனவும் அவர் உறுதியளித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, இலங்கையின் கொள்கைகளுக்கு இணங்க உதவுவதில் உறுதியாக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்து இருந்தது. குறிப்பாக 300 மில்லியன் டாலர் முதல் 600 மில்லியன் டாலர் வரை இலங்கைக்கு வழங்குவதாக சர்வதேச நிதியம் கூறியிருந்த நிலையில், உலக வங்கியும் தற்போது இலங்கைக்கு உதவ முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

World Bank to disburse $700 million to Sri Lanka

இதையும் படிங்க: Crime: ஆறு குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் வீசி கொலை செய்த தாய்