US Gun Violence: அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாசாரம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாசாரம்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாசாரம்

US Gun Violence: அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பதும், பெரிய அளவில் கூட துப்பாக்கி சூடு நடத்தப்படுவதும் அந்நாட்டில் அதிகரித்து உள்ளது.

இதுபற்றி துப்பாக்கி வன்முறை ஆவண பதிவு செய்யும் ஆய்வு குழு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், நடப்பு 2022ம் ஆண்டில் அமெரிக்காவில் பெரிய அளவில் 140 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன என தெரிவித்து உள்ளது.

7,500 வழிகளில் இருந்து தினசரி தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. பதிவு செய்யப்பட்டவையாகவும், ஆய்வு செய்யப்பட்டவையாகவும் சம்பவங்களின் எண்ணிக்கை உள்ளன என்றும் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், கடந்த வார இறுதியில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 8 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். 16 பேர் காயமடைந்து உள்ளனர் என நகர போலீசார் தெரிவித்து உள்ளனர் என உள்ளூர் ஊடகம் தெரிவித்து உள்ளது.

சிகாகோவின் தெற்கு கில்பேட்ரிக் பகுதியில் 69 வயது முதியவர் கடந்த வெள்ளி கிழமை மாலை 5.45 மணியளவில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். 62 வயது பெண் மற்றும் ஒரு சிறுவர் உள்பட அனைத்து வயது மக்களும் துப்பாக்சி சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டு உள்ளனர். பிரைட்டன் பூங்கா, தெற்கு இண்டியானா, வடக்கு கெத்ஜி அவென்யூ, ஹம்போல்ட் பூங்கா உள்ளிட்ட நகரங்களிலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

இதையும் படிங்க: NEET: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!!

எனினும், சிகாகோ நகரில் கடந்த வாரஇறுதியில் 8 பேர் சுட்டு கொல்லப்பட்டும், 42க்கும் கூடுதலானோர் காயமடைந்தும் உள்ளனர் என்று ஊடகம் ஒன்று தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி நகரில் ஆண்டுதோறும் மட்பக்ஸ் என்ற பெயரில் உணவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் இதேபோன்று திருவிழா களை கட்டியது. இந்த திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்நிலையில் விழாவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்து உள்ளனர்.

விடுமுறை நாட்களில் கூட அமெரிக்காவில் மக்களை இலக்காக கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்து வருவது அதிகரித்து காணப்படுகிறது. இதனை எதிர்கொள்ள பைடன் தலைமையிலான அரசு புதிய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

US Gun Violence Surges

இதையும் படிங்க: Corona Cases: இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு