Boris Johnson resigns : இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன் ராஜினாமாவை தொடர்ந்து அவரது கேபினட்டில் இருந்த 5 அமைச்சர்கள் உட்பட 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த வண்ணம் உள்ளனர்.

லண்டன் : Boris Johnson resigns : இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

கன்சர்வேட்டிவ் கட்சியில் கடும் எதிர்ப்பை சந்தித்து வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். நாட்டுக்கு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, நாடாளுமன்ற கன்சர்வேடிவ் கட்சியின் விருப்பத்தின்படி நாட்டுக்கு புதிய பிரதம வேட்பாளரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் ஜான்சன், அண்மை காலமாக‌ ஊழல் ஊழல் புகார்களை எதிர்கொண்டு வந்தார். இதனால், போரிஸ் ஜான்சனின் தீவிர ஆதரவாளர்கள் கூட அவருக்கு எதிராக திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. போரிஸ் ஜான்சன் ராஜிநாமாவிற்கு அவரது கேபினட்டில் இருந்த 5 அமைச்சர்கள் உட்பட 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்த வண்ணம் உள்ளனர்.

மேலும், போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற முழக்கமும் பல நாட்களாக ஒலித்தது. போரிஸ் ஜான்சனின் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான கருவூலத் தலைவர் நாதிம் ஜஹாவி, நாட்டின் நலனுக்காக பிரதமரிடம் ராஜிநாமா செய்யச் சொன்னதை அடுத்து அவர் பதவி விலக ஒப்புக்கொண்டார்.

வரும் அக்டோபரில் நடைபெற உள்ள கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டிற்குள் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெறும். பிரிட்டனில் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் முடியும் வரை போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் நீடிப்பார் என கூறப்படுகிறது.

போரிஸ் ஜான்சனுக்குப் பின் முன்னாள் சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட், முன்னாள் கருவூலத் தலைவர் ரிஷி சுனக், வெளியுறவு செயலாளர் லிஸ் டிரஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் ஆகியோரில் ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராக வரக் கூடும் என தெரிகிறது.