Strawberry Moon 2022: இன்றிரவு தோன்றும் “ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்”!

இன்றிரவு தோன்றும் “ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்

Strawberry Moon 2022: அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் ஸ்ட்ராபெரி என வர்ணிக்கப்படும் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவு வானில் தெரியவுள்ளது. ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் நிகழ்வின்போது வானத்தில் உள்ள முழு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும்போது இந்த அரிய நிகழ்வு நடப்பதாக கூறும், நாசா விஞ்ஞானிகள், இந்தியாவில் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் தெரியாது என்றும், எனினும் பொதுமக்கள் இதனை இணையத்தின் வாயிலாக காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு குறைவாக இருக்கும்போது நிலவின் அளவு புவியில் இருந்து சற்று பெரிதாக தோன்றும். இச்சமயத்தில் ஏற்படும் பௌர்ணமி நிலவு வழக்கத்தைவிட மிகப் பெரிதாக இருக்கும். இதுவே “சூப்பர் மூன்”. தற்போதும் இதே நிகழ்வு தான் நிகழவுள்ளது. ஆனால் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும்போது அந்த சூப்பர்மூன் “இளஞ்சிவப்பு” நிறத்தில் ஒளிரும். இதைத்தான் “ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” என்று அழைக்கின்றனர்.

Strawberry Moon 2022: When Will It Peak

இதையும் படிங்க: தமிழக பள்ளிகளில் 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்