Amitabh Bachchan Statue New Jersey : அமெரிக்காவில் அமிதாப்பச்சனின் சிலை : அவரது தீவிர ரசிகர் சிலையை வடித்துள்ளார்

கோபி இந்தியாவைச் சேர்ந்த அமிதாப் பச்சன் ரசிகர் மற்றும் அமெரிக்காவில் தொலைவில் உள்ள நியூ ஜெர்சியில் வசிக்கிறார். அங்கு புதிய இல்லம் கட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டின் முன் உட்கார்ந்த நிலையில் அமிதாப் பச்சன் கோட் அணிந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Amitabh Bachchan Statue New Jersey :பாலிவுட்டின் பிக் பி எனக் கூறப்படும் அமிதாப் பச்சன் இன்றளவும் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவரின் பல்வேறு வேடம் ஏற்று நடிப்பதை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இதனால் அவருக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதுபோன்ற ரசிகர் ஒருவர் தனது இல்லத்தின் முன்பு அமிதாப் பச்சனின் சிலையை வடித்து, அமிதாப் பச்சனின் ரசிகர் என்பதனை நிரூபித்துள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சன் (Actor Amitabh Bachchan) மொழிகளை கடந்து, எல்லா மொழியினரின் மனதை வென்றுள்ள நட்சத்திரமாக திகழ்கிறார். இதனால் எத்தனை சூப்பர் ஸ்டார்கள் வந்தாலும், அமிதாப் பச்சன் மீதான அன்பு, காதல், ரசிப்புத் தன்மை இன்னும் குறையவில்லை. இதற்கு சாட்சியாக அமிதாப் பச்சன் ரசிகர் ஒருவர் தொலை தூரத்தில் உள்ள அமெரிக்காவில் தனது இல்லத்தின் முன்பு அமிதாப் பச்சனின் சிலையை வடித்து, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

கோபி இந்தியாவைச் சேர்ந்த அமிதாப் பச்சன் ரசிகர் (Gobi is an Amitabh Bachchan fan from India) மற்றும் அமெரிக்காவில் தொலைவில் உள்ள நியூ ஜெர்சியில் வசிக்கிறார். அங்கு புதிய இல்லம் கட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டின் முன் உட்கார்ந்த நிலையில் அமிதாப் பச்சன் கோட் அணிந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை கோபியே சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.அமிதாப் எனக்கும் என் மனைவிக்கும் கடவுளை விட மேலானவர். அவருடைய எண்ணங்கள் அனைத்தும் என்னை ஊக்கப்படுத்துகின்றன. இவரைப் போன்ற எளிய மனிதரை நான் பார்த்ததில்லை.மற்ற நட்சத்திரங்களைப் போல் இல்லை. இதன் காரணமாகவே அவரது சிலையை எங்கள் வீட்டின் முன்பு அமைக்க முடிவு செய்துள்ளதாக கோபி ஊடகங்களுக்கு அளித்துள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்ற கோபி, அங்கு தனது தொழிலை செய்து வருகிறார். அவர் தொழிலதிபராக மட்டுமின்றி, அமிதாப் பச்சனின் பெயரில் இணையளத்தையும் நடத்தி வருகிறார் (He also runs a website in the name of Amitabh Bachchan). அமிதாப் பச்சன் சிலையை வடிப்பது குறித்து கோபி அமிதாப் பச்சனிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதற்கு ஒது போன்ற ரசிப்புத் தன்மை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். என்றாலும் கோபி அதனை பொருட்படுத்தாமல், அமிதாப் பச்சன் சிலையை வடித்துள்ளார். அமிதாப் பச்சனின் கோன் பனகே கரோர்பதி மூலம் அவரது ரசிகராக கோபியும், அவரது மனைவி ஆகி உள்ளனர். இதில் அமிதாப் பச்சன் தோற்றம் அளித்ததைப் போல சிலையை அவர் உருவாக்கி உள்ளார். இந்த சிலையை வடிக்க ரூ. 60 லட்சம் செலவாகி உள்ளதாம்.