Queen’s funeral security to cost: ராணியின் இறுதிச் சடங்கில் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா?

லண்டன்: Queen’s funeral security to cost Rs 59 crores in Indian rupees. ராணியின் இறுதிச் சடங்கிற்கான பாதுகாப்பை பலப்படுத்த 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 59 கோடி ரூபாய்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கைப் பாதுகாப்பது UK வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஒற்றை நாள் நடவடிக்கையாகும், இது 7.5 மில்லியன் அமெரிக்க லாடருக்கும் அதிகமான செலவாகும்.

இங்கிலாந்தில் வரும் திங்களன்று (19ம் தேதி) நடைபெறும் இறுதிச் சடங்கில் இதுவரை எதிர்ப்பார்க்காத அளவில் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரிட்டிஷ் Mi5 மற்றும் Mi6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர காவல்துறை மற்றும் ரகசிய சேவை ஆகியவை இணைந்து செயல்படும். இங்கிலாந்து காவல் துறை இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும்.

மற்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது பெரும் செலவாக கருதப்படுகிறது. கடந்த 2011ல் இளவரசர் மற்றும் வேல்ஸ் இளவரசர் திருமண செலவு அதிகமாக இருந்தது. ஆனால் இந்த பாதுகாப்பு செலவை ஒப்பிட முடியாது. வில்லியம் மற்றும் கேட்டின் 2011 திருமணத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது. திருமணத்திற்கான காவல்துறை செலவுகள் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்படும் என்று முன்னாள் ராயல் பாதுகாப்பு அதிகாரியான சைமன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

நகரின் சில பகுதிகள் ஏற்கனவே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இறுதிச் சடங்கிற்கு முன்னதாக பல தெருக்கள் மூடப்படும். சுமார் 7.5 லட்சம் பேர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.