Monkey pox: குரங்கு அம்மை அச்சுறுத்தலால் சர்வதேச அவசர நிலை அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்

கடந்த 2 ஆண்டுகளில் கரோனாவுக்கு அடுத்தப்படியாக குரங்கு அம்மை நோயை சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது

லண்டன்: State of International Emergency: குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதுமாக பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பரவலாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் அமெரிக்காவிலும் அடியெடுத்து வைத்தது. நைஜீரியாவில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்துக்கு வந்த ஒருவர் மூலமாக அந்நாட்டில் குரங்கு அம்மை பரவ தொடங்கியது.

உரிய நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதால் பல்வேறு மாகாணங்களுக்கு குரங்கு அம்மை பரவியது. கடந்த சில வாரங்களில் 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் (In more than 75 countries) பரவிய குரங்கு அம்மை நோயால் 16,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம் என உலக சுகாதார அமைப்பின் (World Health Organization) தலைவர் டெட்ரோஸ் அறிவித்துள்ளார்.

ஐரோப்பாவுக்கு குரங்கு அம்மையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல்வேறு நாடுகளில் தொற்று பரவி வருவதை அடுத்து சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம் (State of International Emergency) அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கரோனாவுக்கு அடுத்தப்படியாக குரங்கு அம்மை நோயை சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.