Major fire in 45 Floor Building: 45 மாடி.. 715 அடி கட்டிடம்.. 20 நிமிடத்தில் எரிந்து நாசம்

சாங்சா: Major fire engulfs skyscraper in Changsha, central China. சீனாவின் சாங்சா நகரில் உள்ள 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் கட்டிடம் முழுவதும் தீயில் எரிந்து நாசமாயின.

மத்திய சீன நகரமான சாங்ஷாவில் கடந்த 2000ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட 218-மீட்டர் (715 அடி) கட்டிடம் ஒரு பெரிய ரிங் ரோடுக்கு அருகில் அமைந்துள்ளது. ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில் சுமார் 10 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கட்டிடத்தில் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சைனா டெலிகாமம் அலுவலகம் அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 42 மாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தளத்தில் இருந்து அடர்ந்த புகை கிளம்பியதால் அனைத்து மாடிகளும் பயங்கரமாக எரிந்தன என அந்நாட்டு அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் மாகாண தீயணைப்புத் துறை, தற்போது ​​​​தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் எதையும் நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினர்.

அந்நாட்டு தொலைக்காட்சி மூலம் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், நகரின் ஒரு கட்டிடத்தில் ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் எரிவதைக் காட்டியது. வானத்தில் கருப்பு புகை கிளம்பியது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு படத்தில் எரிந்த முகப்பில் அவசரகால பணியாளர்கள் தண்ணீரை தெளித்ததால், தீப்பிழம்புகள் தணிந்ததைக் காட்டின.

சைனா தொலைதொடர்பு நிறுவனம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், இன்று மாலை சுமார் 4:30 மணியளவில், சாங்ஷாவில் உள்ள எங்கள் எண் 2 கம்யூனிகேஷன்ஸ் டவரில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இன்னும் உயிரிழப்புகள் கண்டறியப்படவில்லை மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து ஊடகங்களில் ஹுனான் மாகாணத்தில் உள்ள சங்ஷாவில் உள்ள சீனா-டெலிகாம் வானளாவிய கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 நிமிடங்களில் முற்றிலும் எரிந்து நாசமானது. நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என்றும், சர்வர்களுக்கான 35 டன் எரிபொருள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், வடகிழக்கு ஜிலின் மாகாணத்தில் ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு தற்காப்புக் கலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலும் குழந்தைகளாகும்.