குவைத் – பெங்களூரு விமானம்: ஜசீரா ஏர்வேஸ் பெங்களூருக்கு நேரடி விமானங்களைத் தொடங்க உள்ளது

Kuwait – Bengaluru Flight: குவைத் ஏர்லைன்ஸ் ஜசீரா ஏர்வேஸ் குவைத்திலிருந்து கர்நாடகத்தின் பெங்களூருவிற்கு தனது சேவையை நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கும் என்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. வாரத்திற்கு இரண்டு முறை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் பெங்களூவிற்கு ஜசீரா ஏர்வேஸ் விமானங்கள் பறக்க உள்ளன. பெங்களூரிலிருந்து குவைத்திற்கு ரூ.19,999 என்ற தொடக்க‌ கட்டணம் உள்ளது.

குவைத்தின் முன்னணி விமான நிறுவனம் (Kuwait’s leading airline), பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயங்கி வருகிறது. 2017 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இந்தியாவில் ஹைதராபாத்தில் தனது சேவௌ நடவடிக்கைகளைத் தொடங்கியது. தற்போது அந்த நிறுவனம் இந்தியாவின் எட்டு இடங்களிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு, இடங்களுக்கு தனது சேவையை அதிகரிக்கும் அளவிற்கு உயந்துள்ளது. இப்போது குவைத்துக்கும் அதற்கு அப்பாலும் 30 நேரடி சேவைகளைக் கொண்டுள்ளது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவின் பிராந்திய மேலாளர் ரோமானா பர்வி (Romana Parvi, Regional Manager, South Asia) கூறுகையில், “குவைத்திலிருந்து இந்தியாவிற்கு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை இணைக்கும் வகையிலும், இந்தியாவிலிருந்து குவைத் மற்றும் அதற்கு அப்பால் பயணிகளை அழைத்து செல்லும் வகையிலும் கார்டன் சிட்டியில் வாரத்திற்கு இரண்டு சேவைகளை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

இந்தியாவில் ஏர்லைன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த அறிமுகம் உள்ளது (The launch is part of the airline’s expansion in India). ஜசீரா ஏர்வேஸ் இப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஏற்பாட்டின் கீழ் கிடைக்கும் அனைத்து இடங்களுக்கும் எங்கள் விமாங்கள் பறக்கிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.