Japanese Man Transformed Into A Wolf: ஓநாய் போல உருமாறிய ஜப்பான் வாலிபர்: பல நாள் கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி

ஜப்பான்: அனைவருக்குமே ஒரு ஆசை இருக்கும். அது போலவே ஜப்பான் நாட்டை (Japanese Man Transformed Into A Wolf) சேர்ந்த ஒரு இளைஞருக்கு வித்தியாசமான ஆசை வந்தது. அதாவது ஓநாயாக உருமாற முடிவு செய்தார்.

எதற்காக என்றால் விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தார். இதற்காகவே நாமும் ஏன் அதுபோல ஒருநாள் வேடமிட்டால் என்ன என்று யோசனை செய்தார். அதற்கான முயற்சியில் ஈடுபட துவங்கினார்.

எனவே இதற்காக ஆடை அலங்கார நிபுணரை அணுகி தனது ஆசையை கூறினார். இதனை கேட்ட அவரும் அதற்காக ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதித்தார். ஓநாய் போன்று மாறுவதற்கான ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க அதிகமான பணம் செலவு ஆகும் என்று ஆடை வடிவமைப்பாளர் கூறினார். அதற்கும் அந்த இளைஞர் சம்மதம் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து இளைஞரை ஓநாயாக மாற்றுவதற்கான வேலைகளை தொடங்கினார் ஆடை வடிவமைப்பாளர். இதற்காக அவர் பலக்கட்டமாக உடையை தைப்பதற்காக நிறுவனத்துக்கு சென்று வந்த நிலையில் அதற்கான பலனும் கிடைத்தது.

இளைஞரை 50 நாட்களில் அச்சு அசல் ஓநாய் போல மாற்றப்பட்டார். பின்னங்கால்களால் ஓநாய் நடந்து செல்வதை போல சிறிது தூரம் நடந்தார். இதனை பார்த்த அனைவரும் அசந்து போனார்கள். திடீரென்று யாராவது பார்த்தால் ஓநாய்தான் வந்து விட்டது என்று நினைக்கும் அளவுக்கு அச்சு அசலாக இருந்தது. ஓநாயாக மாறுவதற்காக இளைஞர் சுமார் ரூ.18 லட்சம் செலவு செய்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. இது பற்றி அந்த இளைஞர் கூறும்போது, எனக்கு நீண்ட நாட்கள் கனவாக இருந்ததை தற்போது பூர்த்தி செய்துள்ளேன். எனக்கு செல்லப்பிராணிகள் என்றால் அளவு கடந்த அன்பு வைப்பேன். இதனால்தான் ஓநாய் போன்று உருமாற முடிவெடுத்தேன் என்றார்.