Gotabaya Rajapatse will return to the country: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச நாடு திரும்புகிறார்: இலங்கை போக்குவரத்து அமைச்சர் பந்துலா குணவர்த்தனே தகவல்

file photo.

கொழும்பு : Former President of Sri Lanka Gotabaya Rajapatse will return to the country : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச, சிங்கப்பூரிலிருந்து விரைவில் நாடு திரும்ப உள்ளதாக இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெட்ரோல், டீசல் (Petrol, Diesel) உள்ளிட்ட‌ விலைவாசி உயர்ந்ததால், எரிபொருள் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு எற்பட்டு, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையடுத்து முதலில் அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபட்ச முதலில் தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை, இலங்கையிலேயே பதுங்கி உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், அதிபராக பதவி வகித்த கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவரது மாளிகையை மக்கள் முற்றுகை இட்டு, மாளிகைக்குள் புகுந்தனர். முன்னதாக அங்கிருந்து தப்பிய கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிற்கு (Maldives) தப்பிச் சென்றார். அங்கு அவருக்கு மக்களிடையே எதிர்ப்பு வலுத்ததால், அவர் அங்கிருந்து, சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். தற்போது சிங்கப்பூரிலும் அவர் தங்கி உள்ளதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனை அவர்கள் அந்நாட்டின் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர் விரைவில் சிங்கப்பூரிலிருந்து கிளம்ப உள்ளார். எனவே நாட்டு மக்கள் யாரும் அவருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டு, நடைபெற்ற வாக்கெடுப்பில் அந்நாட்டின் பிரதமராகவும், இணை அதிபராகவும் பதவி வகித்த ர‌ணில் விக்ரமசிங்கே (Ranil Wickramasinghe) தற்போது அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அவர் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, விண்ணளவு உயர்ந்திருந்த விலைவாசிகள், ஓரளவிற்கு படிப்படியாக குறைந்து வருகின்றன. இதனையடுத்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தற்போது அடக்கி வாசித்து வருகின்றனர். இந்த நிலையில், சிங்கப்பூரில் தங்கி உள்ள கோத்தபய ராஜபட்ச, இலங்கைக்கு திரும்ப உள்ளார் என அந்நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து, அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தலைமையில் அமைந்துள்ள புதிய அரசின் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன (Bandula Gunawardene) ” முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தலைமறைவாக உள்ளதாக கூறப்படுவதை நான் நம்பவில்லை. அவர், விரைவில் நாடு திரும்ப வாய்ப்பு உள்ளது ” என செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபட்ச மீண்டும் திரும்பி வருவார் என கூறப்படுவதையடுத்து, அவருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே ஆத்திரத்தை மூட்டி உள்ளது. இதனால் மீண்டும் இலங்கையில் போராட்டம் வெடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி இலங்கையில் ராணுவத்தினரின் உதவி கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரம சிங்கே செய்து வருகிறார்.

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையில் ஜனநாயக முறையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படவும், பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பிரதமர் தினேஷ் குணவர்த்தனேவை இந்திய துாதர் கோபால் பக்லே (Indian Ambassador Gopal Bagle) சந்தித்து, இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.