Elon Musk Says He Will Resign As Twitter Ceo: முட்டாள் மாதிரி ஒருவர் சி.இ.ஓ. கிடைத்தால் நான் ராஜினாமா செய்கிறேன்: எலான் மஸ்க்

அமெரிக்கா: உலக பணக்காரர்களில் ஒருவராக எலான் மஸ்க் (Elon Musk Says He Will Resign As Twitter Ceo:) சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற பின்னர் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார்.

அதன்படி முதலாவதாக 50 சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார். இதனால் உலகம் முழுவதும் பேசும் பொருளாக எலான் மஸ்க் மாறினார். குரங்கு கையில் பூமாலை கிடைத்த கதையாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார் என அவர் மீது விமர்சனங்கள் வரத்தொடங்கியது.

இதற்கிடையே ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் தான் தொடர வேண்டுமா என்று ட்விட்டரிலேயே எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி வந்தார். அதன்படி 1.7 கோடி பேர் பங்கேற்ற இந்த கருத்து கணிப்பில் அவர் பதவி விலக வேண்டும் எனவும் 57.5 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அதே சமயம் 42.5 சதவீதம் பேர் மீண்டும் எலான் மஸ்க் பதவியில் தொடர வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் பெரும்பாலான மக்கள் நிர்வாக பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும் என்ற கருத்தை கூறியதால் அதனை ஏற்று எலான் மஸ்க் பதவி விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்தது.

இந்நிலையில், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை கூடிய விரைவில் ராஜினாமா செய்ய உள்ளேன். அப்பதவிக்கு ஒரு முட்டாள்தனமான நபரை தேடிக்கண்டுப்பிடித்து அதன் பின்னர் ராஜினாமா செய்ய உள்ளேன். அதன் பின்னர் மென்பொருள், சர்வர் பணிகளை மட்டும் ஏற்றுக்கொண்டு செயல்பட உள்ளேன்.

இது தொடர்பாக எலான் மஸ்க்கை பின்பற்றுபவர்கள் கூறியதாவது: சி.இ.ஓ. பதவிக்கு ஏற்கனவே ஒருவரை தேர்வு செய்துவிட்டு எலான் மஸ்க் இது போன்ற கருத்து கணிப்பை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு சில மாதங்களாக ட்விட்டர் நிறுவனத்தில் நடந்து வந்த சர்ச்சைகள் ஓய்ந்த பாடில்லை என பலரும் ட்விட்டரில் புலம்பியதை பார்க்க முடிகிறது.

முந்தைய செய்தியை பார்க்க:Anbumani condemned: திருட்டுத்தனமாக வெட்டப்பட்ட 60க்கும் மேற்பட்ட பனைமரங்கள்: அன்புமணி கண்டனம்

முந்தைய செய்தியை பார்க்க:Flood warning: 105 அடியை நெருங்கிய பவானிசாகர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை