Donald Trump’s Facebook Unblocking: டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் தடை நீக்கம்

வாஷிங்டன்: Former US President Donald Trump’s Facebook page has been unbanned. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 2 ஆண்டுகளுக்குப் பின் இந்த தடையை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் டெனால்டு ட்ரம்ப் வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி, பேஸ்புக், இண்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் முடக்கி வைக்கப்பட்டன.

இந்தநிலையில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, ட்ரம்புக்கான தடையை அந்நிறுவனம் நீக்கியது. தற்போது பேஸ்புக் மற்றுன் இண்டாகிராம் பக்கங்களுக்கான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவர் நிக் கிளெக் வெளியிட்டுள்ள அறிக்கையில், டொனால்டு ட்ரம்பின் பக்கங்களுக்கான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முறைகேடாக செயல்படும் கணக்குகளை கண்டறிய புதிய பாதுகாப்பு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

டொனால்டு ட்ரம்பை பேஸ்புக் பக்கத்தில் கிட்டத்தட்ட 34 மில்லியனுக்கும் மேற்பட்டார் பின்தொடர்பவர்களாக உள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 23 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர்.